சித்தஞ்சி சிவகாளினி சித்தர் பீடத்தின் அற்புதங்கள்

ஓம் காளியே சரணம். கடவுளின் படைப்பில் மனித பிறப்பு மிகவும் மகத்துவம் பெற்றது. நாம் பரபரப்பான, பதற்றமான, அவசரமான சூழலில் வாழ்ந்து வருகிறோம். கோபம், சகிப்புத்தன்மையின்மை இவற்றால் பல துன்பங்களை சந்திக்கிறோம். மேலும், எதிரிகளாலும், நவகிரகதோஷங்களாலும், முற்பிறவியின் கர்மவினையாலும் தொடர்ந்து துன்பத்தை அடைந்து வாழ்வில் வெற்றி அடைய முடியாமல் சோதனை, துக்கம் இவை நாம் வாழ்க்கையாக வாழ்ந்து வருகிறோம். இவற்றில் இருந்து விடுபட ஆன்மீக பாதையே சிறந்தது.
சித்தஞ்சி அன்னையின் மூல மந்திரம், ஸ்லோகம், விஷேச யாகவேள்விகள் செய்து அன்னையை மனம் உருகி வேண்டுவதால் உள்ளம் அமைதி பெறும். சிவகாளி சித்தர் பீடம் பழங்காலத்தில் சித்தர்கள் வாழ்ந்த இடமும், பத்ரகாளி அன்னை காமகாசூரனை அழித்து பக்தர்களை காக்க அருள்பாலித்துக் கொண்டு உள்ள புண்ணிய ஸ்தலம் தான் சித்தஞ்சி சிவகாளினி சித்தர் பீடம் ஆகும். ஸ்ரீ மஹாசண்டி மஹாயாகா விதானம் என்ற நூலில் சித்தஞ்சி பற்றி மந்திர ஸ்லோகமானது 274-வது பக்கத்தில் உள்ளது.
இந்த ஸ்தலம் பாலாற்றின் கிளை நதியான பம்பை நதிக்கரையோரம் ரம்மியமான இயற்கை சூழலில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் செய்யப்படும் விஷேச யாகங்கள் நம்முடைய பிரச்சனைகளை 100-க்கு 100 சதவிதம் நீக்கி விஷேச பலனைத் தரவல்லது. தெய்வ அருளும், லட்சுமி கடாட்சமும், தீராத வினை தீர்க்கும் சக்தி வாய்ந்த ஸ்தலமாக சித்தஞ்சி சிவகாளி சித்தர் பீடம் அமைந்துள்ளது. மயானத்தில் தவமிருந்து அன்னையின் பரிபூரண அருளைப் பெற்றவரான தவத்திரு. சக்தி மோகனானந்த சுவாமிகள் இத்திருக்கோவிலை நிறுவினார். பக்தர்களுக்காகவும், உலக நன்மைக்காகவும், விஷேச வேள்விப் பூஜைகளும், பரிகார பூஜைகளும் தினந்தோறும் சுவாமிஜி செய்து வருகிறார். அமாவாசை, பௌர்ணமி தினங்களில் சிவகாளி அன்னைக்கு விஷேச அபிஷேகங்களைச் செய்து மங்கள அலங்காரத்துடன் மகா தீபாராதனை செய்து சத்சங்கம் நிகழ்ச்சி மக்களின் மன இருளைப் போக்கி ஸ்தலத்தை நாடிவரும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தானத்தில் சிறந்த அன்னதானத்தையும் வழங்கி அருளாசி வழங்கி வருகிறார்.