Ads Top

கேள்வி-பதில்


பக்தர்களின் உள்ளத்தில் எழும் வினாக்களுக்கு 
தவத்திரு. சக்தி மோகனானந்த சுவாமிகள் 
அருள்நெறியோடு ஐயத்தை அகற்றும் விடைகள்
1. தவயோகியே சிரம் தாழ்ந்த வணக்கம். காளிதேவியின் மகிமையையும், அற்புதத்தையும் அடியேனுக்கு கூறுங்களேன் ?
தெய்வங்களில் முதன்னைமயானவள் காளிதேவியே. உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் சக்தியைக் கொடுப்வள் காளி. சிவனுக்கு நிகரானவள் சக்தியே. அனைத்து அம்மன் தெய்வங்களும் காளியின் மறுரூபங்களே. காளி ஒரு குழுந்தையைப் போல் சாந்த கோலம் கொண்டவள். காமகாசூரனை அழிக்கும்போது உக்ர கோலம் ஏற்பட்டது. ஈரேழுபதினாறு லோகத்திற்கும், அனைத்திற்கும் சக்தியானவள், அனைத்தையும் படைப்பவள், காப்பவள் இவளே காளிதேவி. காளியை மிஞ்சவும் எவருமில்லை. காளியை வணங்குபவருக்கு அழிவில்லை. தன்னை வழிபடுபவர்களுக்கு ராஜவாழ்க்கையைக் கொடுப்பவள் காளி. பத்ரகாளி பக்தனைக் கண்டு எதிரிகள் அஞ்சுவார்கள். 
காளிளை எந்த நேரத்திலும் வழிபடலாம். காளியின் மந்திரமே மகாமந்திரம். காளி மந்திரம் உடனுக்குடன் பலன்தரும். காளி தன் பக்தர்களைப் பார்த்து நான் அபயம் அளிக்கிறேன் என்று சப்தத்துடன் கூறுகிறாள். பக்தர்களுக்கு வேண்டியதைத் தயக்கமின்றி கேட்கின்றவர்களுக்கு கேட்டவாறு நான் வரம் அளிக்கின்றேன் என்று கூறுகிறாள். அனைத்தையும் அளிப்பவள் காளி அன்னையே ஆவாள். 
காளி மந்திரம் ஜெபிப்பதால் அற்புத சக்தியைப் பெறலாம். காளியை நினைத்துச் செய்யும் தவத்திற்கு இணையான தவம் வேறு எதுவும் இல்லை. காளிதேவி சர்வ சக்தியானவள். காளியை வணங்கினால் அனைத்து கடவுளையும் வணங்கியதற்குச் சமம். காளியை வணங்குவதால் தெய்வ தேவதைகளுக்கும் சக்தி கிடைக்கின்றன. காளியை வணங்குபவர்களுக்கு ராஜயோகம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், பலம், சக்தி பெருகும், மோட்சம் உண்டாகும். 
மானிடர்களில் காளியின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றவர்கள் பலராவார். காளி கருணையான தெய்வம், கண்டிப்பான தெய்வமும் கூட, ஸ்ரீ காளிதேவிக்கு எலுமிச்சை மாலை போட்டு வழிப்பட்டால் எதிரிகள் தொல்லை விலகும். பில்லி, சூன்யம், ஏவல் நீங்கும். கடலில் எல்லையில்லாத பரப்பு அதன் தண்ணீரைக் காத்துக் கொண்டு இருப்பதுபோல் வாழ்க்கையில் ஆதார சர்வரோக நிவாரணியாக இருக்கிறாள் ஸ்ரீபத்ரகாளி. கருணைக்கடல் ஆன்மமொட்டினை மலரவைக்கும் தாய் ஸ்ரீபத்ரகாளி ஆவாள்.  
2. தவயோகியே ! ஸ்ரீ பத்ரகாளி உருவப்படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா ? வழிபடுவதால் நன்மை உண்டாகுமா ? தெளிவாகக் கூறுங்கள் சுவாமி ?
ஸ்ரீ காளியை வீட்டில் வைத்து வணங்கக்கூடாது என்று பலர் பயப்படுவார்கள். உன்மையான பக்தர்கள் எந்த தவறு செய்தாலும் காளி பொறுத்துக் கொள்வாள். காளியின் படம் அல்லது சிலைக்கு முன் ஒரு சிறிய விநாயகர் படம் அல்லது விநாயகர் சிலை வைத்து வணங்கினால் ஏதாவது தவறு ஏற்பட்டால் கூட காளிதேவிக்குக் கோபம் வராது. 
சிவகாளியை வழிபடுவதால் நன்மை மட்டுமே நடக்கும். எதிரிகள் அஞ்சி நடுங்குவார்கள். எதிரிகள் சூழ்ச்சி செய்து நீங்கள் வணங்கும் சிவகாளிதேவியை வணங்காதவாறு செய்து உங்களுக்கு பிரச்சனைகள் செய்வார்கள். தீயவர்களின் சூழ்ச்சியை முறியடிக்க காளியை வணங்குங்கள். தேவாதி தேவர்கள், ரிஷி முனிவர்கள், மன்னாதி மன்னர்கள், பஞ்சபாண்டவர்கள், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், விக்ரமாதித்தன், காளிதாசன், தெனாலிராமன், வீரசிவாஜி, அன்னை சாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் அனைவருமே ஸ்ரீ காளிதேவியை வழிபட்டு உலகத்தில் அழியாப்புகழ் பெற்றுள்ளனர். சிறப்பு வாய்ந்த சிவகாளினி தேவியைச் செவ்வரளி பூ மாலை, 51 எலுமிச்சைப்பழ மாலை போட்டு வணங்கினால் எதிர்ப்புகள் இருக்காது. பில்லி, சூன்யம், ஏவல் செய்வினை நீங்கும். இலுப்பை எண்ணெய், வேப்ப எண்ணெய், நல்லெண்ணெய் கலந்து விளக்கு ஏற்றினால் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். எதிரிகள் தொல்லை விலகும். சிவகாளினி எப்போதும் துணையாக இருப்பாள். ராகு காலத்தில் விளக்கு ஏற்றினால் மேன்மேலும் பலன் கிடைக்கும்.
3. குருவே ! எங்கள் குடும்பத்தில் பில்லி, சூன்யம், ஏவல், பிசாசு கொடிய தீய சக்திகளால் தினமும் துன்பமடைந்து வருகிறோம். இவற்றிலிருந்து நாங்கள் எப்படி மீள்வது ? இதற்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும் சுவாமிஜி ?
எதிரிகள் நம் குடும்பத்தை அழிப்பதற்காக ஏவல், பில்லி, சூன்யம் செய்வினைகள், மாய மந்திர மை வேலைகள் இவற்றை துர்மந்திரவாதிகளைக் கொண்டு, துர்தேவதைகளை ஏவி விட்டு குல தெய்வங்களை கட்டுக்கட்டி நம்முடைய குடும்பம் அழிந்துவிட வேண்டும் என்று எதிரிகள் ஏவல் உச்சாடனம் செய்வதால் கணவன் மனைவிக்குள் தொடர்ந்து சண்டை சச்சரவுகள் உண்டாகும்படியாகவும், பிள்ளைகள் பெற்றோர்களின் பேச்சை கேட்காமலும், கல்வியில் மந்தம், பித்து பிடித்தது போல் இருப்பது, உடல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவராலும் கண்டுபிடிக்க முடியாத நோய்கள் உண்டாவதும், குடும்பத்தில் ஒற்றுமை இல்லாமலும், தொழிலில் நஷ்டம் ஏற்படுத்தியும், கடன் பிரச்சனை, வழக்கு என்று அலைய வைப்பதும், மனநிம்மதி இல்லாமலும், தூக்கம் இல்லாமலும், தொட்டதெல்லாம் வெற்றி அடையாமல் போகும். 
இந்த செய்வினையை முறியடிக்க பக்தி மனம் கமழும் சித்தஞ்சி எல்லையில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீபத்ரகாளிதேவி, ஸ்ரீபிரித்தியங்கராதேவி, ஸ்ரீவராஹிதேவி, ஸ்ரீஅஞ்சனாதேவி, பால அனுமான், ஸ்ரீஐகிரிவர்த்தினிதேவி ஆகிய பஞ்சபூத சக்திகளை மனதார வேண்டி எந்தவிதமான மாந்திரீக செய்வினையாக இருந்தாலும் நவகிரஹ தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி செய்திட அன்னையின் அருள்வாக்கின்படி அம்மனுக்கு அபிஷேகம் செய்து நம் குடும்பத்திலுள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து பத்ரகாளியம்மன் கருவறையின் எதிரில் உள்ள யாககுண்டத்தின் முன் கலசம் நிறுத்தப்படும். எல்லா தேவைகளுக்கும் நவகிரக சக்திகளுக்கும், 9 விதமான மூலிகைக் குச்சிகளும், உடல்பிணி தீர்க்கும் 108 மூலிகைகள், மருத்துவ குணம் வாய்ந்த வேர் வகைகள், வாசனை திரவியங்கள், நவதானியங்கள், பஞ்சாமிர்தம் கொண்டு நம் கரங்களால் பசுநெய் விட்டு மூலமந்திரம் உச்சாடனம் செய்து தவத்திரு. சக்தி மோகனானந்த சுவாமிகள் ஆசீர்வாதத்தோடு யாகவேள்வி செய்யப்படும். யாகவேள்வியால் எதிரிகளால் விடப்படும் அனைத்து செய்வினைகளும் எல்லா தீயசக்திகளும் இந்த யாகவேள்வியில் எரிந்து சாம்பலாகிவிடும். யாகவேள்வியில் பிரதிஷ்டை செய்த கலசத்தில் உள்ள புனித தீர்த்தம் நம்முடைய பாவங்களையும், கர்மங்களையும், நவகிரக தோஷங்களையும், மனப்பிணிகளையும் முற்றிலுமாக நிவர்த்தி செய்து உங்கள் வாழ்க்கையைப் பக்தி பூர்வமானதாகவும் உங்கள் குடும்பத்தை சக்தி வாய்ந்ததாகவும் மாற்றிவிடும். ஆகவே, குடும்பவேள்வி பூஜை செய்தால் எண்ணற்ற மாற்றங்களுக்கு நல்வழி பிறக்கும்.

4. தவயோகியே பாவம், கர்மங்களில் இருந்தும், முற்பிறவி சாபதோஷங்களில் இருந்து விடுபட்டு, நாங்கள் புண்ணியத்தைப் பெற என்ன பரிகாரம் செய்தால் சிறப்பாக இருக்கும் ?
தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னதானம் செய்வதால் நாம் முற்பிறவியில் செய்த பாவங்களில் இருந்தும், கர்மங்களில் இருந்தும் முழுமையாக விடுபடலாம். பலம் பொருந்திய ஆயிரம் யானைகள், ஆயிரம் போர்க்குதிரைகள், கோடிப்பசுக்கள், நவரத்தினங்கள் பதித்த தங்க நகை ஆபரணங்கள், பாத்திரங்கள், கடல் அளவிற்கான நிலம், உயர்குலத்தைச் சார்ந்த கன்னியதானம் ஆகிய எந்த விதமான தானங்களும் அன்னதானத்திற்கு ஈடுயிணையாவதில்லை. 
மனிதன் பிறக்கின்றான், இறக்கின்றான். அவன் செய்த தர்ம காரியங்கள் என்றும் நிலைத்து இருக்கும். உயிர்கள் வாழ உணவு மிகவும் அவசியம். அன்னம் எனப்படும் உணவு உயிர்களுக்கும், உலகிற்கும் ஆதாரமாகும். அன்னதானம் செய்வதால் வாழ்வில் சந்தோஷம் பெருகும். பூர்வ ஜென்ம பாவங்களும், பித்ரு தோஷங்களும், நம்மை தொடரும் கர்ம வினைகளும், முழுமையாக நீங்கி, மனம் நிம்மதி பெறும். ஒவ்வொரு அமாவாசை தினத்தில் சிவகாளினி சித்தர் பீடத்தில் சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. சிவகாளினி சித்தர் பீடம் ஆலய வளாகத்தில் அமாவாசை தோறும் நடைபெறும் அன்னதான திட்டத்தில் அன்னதானம் செய்பவர்களின் பெயரினை வாழ்த்தி அன்னதானம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு அமாவாசை தோறும் அன்னதானம் செய்யுங்கள். உங்கள் விருப்பப்படி குறைந்தளவு 10 முதல் 100 பேருக்காவது அன்னதானம் செய்யுங்கள். வாழ்வில் மகிழ்ச்சியைப் பெறுங்கள்.
5. தவயோகியே எங்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியும், சந்தோஷத்தோடும் வாழ எந்த விதமான விரதத்தை நாங்கள் கடைபிடித்தால் எங்கள் வாழ்வு மேன்மை பெறும் ?
தினமும் நட்சத்திரங்கள் கிரக நிலைகள் மாறிக்கொண்டே இருக்கின்றது. நாம் செய்த பூர்வ ஜென்ம கர்மத்தினால் நவகிரகங்கள் ஏதாவது சங்கடங்களை தினமும் ஏற்படுத்திக்கொண்டு இருக்கும். அந்த துன்பத்தில் இருந்து விடுபட அமாவாசை விரதத்தை மேற்கொண்டு சிவகாளினி சித்தர் பீடத்தில் நடத்தப்படும் சர்வதோஷ நிவர்த்தி மகா சிவகாளினி ஹோமம், தங்கள் குடும்பத்தோடு வந்து பிரார்த்தனை செய்து வேள்வி பூஜையில் கலந்துக்கொண்டு தேவாதி தேவர்களும், மும்மூர்த்திகளும் மகாசக்தியான சிவகாளினி தேவிக்கும் அவரவருக்குண்டான அவிர்பாகங்கள் உரிய தேவதைகளுக்கும், அக்னி பகவான், ஸ்வாஹா தேவிக்கும் சேர்ப்பிக்கப்படுகிறது. இதில் நவக்கிரங்களுக்குரிய நவதானியங்கள் யாகசமித்துக்கள், உடல் பிணி தீர்க்கின்ற 108 மூலிகைகள், மருத்துவ குணம் வாய்ந்த வேர்வகைகள், வாசனை திரவியங்கள், அன்னைக்கு பிரியமான பட்ஷனங்கள், பசுநெய் சேர்த்து நம் கரங்களால் யாகவேள்வியில் சேர்ப்பதால் அன்னைக்கு அவிர்பாகம் செலுத்தி மிகப்பெரிய புண்ணியம் நம் கைகளால் போடப்படும் யாகசமித்துக்களால் நம்முடைய கிரகதோஷம், நவகிரகதோஷம், தீயசக்திகளிடமிருந்தும் விடுபடலாம். சித்தஞ்சி ஸ்ரீபத்ரகாளியம்மனுக்கு அமாவாசை விரதம் இருந்து கூட்டு மகாவேள்வியில் கலந்துக் கொண்டு உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றிக் கொள்ளுங்கள்.
6. தவயோகியே ! அம்மாவின் அருளால் தொழிலில் நல்ல முன்னேற்றமும், வருமானமும் வருகிறது. ஆனால் கையில் தங்காமல் வீண் செலவு ஆகிறது. லட்சுமி கடாட்ஷத்தோடு வாழ வழி சொல்லுங்கள் குருவே ?
பணம் உள்ளவரிடத்தில் குணம் இல்லை, குணம் உள்ளவரிடத்தில் பணம் இல்லை. பணம், குணம் உள்ளவர்களே அருட்செல்வம் நிறைந்தவர்களாகின்றனர். பணம் சம்பாதிக்க திறமை, உழைப்பு இதனோடு பக்தியும், தெய்வசக்தியும் இருந்தால் அதிர்ஷ்டம் தானாக வரும். செல்வம் நிரந்தரமாக தங்கி நாமும் நம் குடும்பத்தாரும் நன்றாக வாழவேண்டும். எந்த தொழில் செய்தாலும் எந்த நிலையிலும் முன்னேற்றம் அடைந்து பெரிய செல்வந்தராகலாம். தெய்வீக விதிமுறைகளைக் கடைபிடித்தால் குடும்பத்தில் செல்வச் செழிப்போடு மகிழ்ச்சியாக வாழலாம்.
தீய வழிகளில் சம்பாதித்த பணம் சில காலம் ஆடம்பர வாழ்வில் அழிந்துவிடும். காலையில் கண் விழித்தவுடன் தெய்வத் திருவுருவங்களை வணங்குங்கள். நமது உள்ளங்கையை நன்றாக உற்றுபாருங்கள், கண்ணாடியில் நமது முகத்தை பார்ப்பது மிகவும் சிறப்பாகும். ஸ்ரீலட்சுமி காடாட்ஷமும் உண்டாகும். படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது வலப்புறம் காலை கீழ்வைத்து எழ வேண்டும். காலையில் எழந்தவுடன் நமது இஷ்ட தெய்வத்தின் பெயரையோ, குல தெய்வத்தின் பெயரையோ, தெய்வ மந்திரங்களையோ மனதில் சொல்லி எழவேண்டும். வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் முடி, நகம் வெட்டிக் கொள்ளக்கூடாது. ஆள்காட்டி விரலால் பல் தேய்க்கக்கூடாது. நடுவிரலால் பல் தேய்க்கவும். கிழக்கு நோக்கி குளிக்கவேண்டும். மேற்கு நோக்கி குளிக்கக்கூடாது. 
சூரியன் உதயமாவதற்கு முன் எழுந்து குளித்து விளக்கேற்றி தெய்வ மந்திரங்களைத் துதிக்க வேண்டும். புத்தி கூர்மை உண்டாகும், செல்வம், புகழ், பணம், பலம், அழகு, ஆரோக்கியம் உண்டாகும். காலையில் வீட்டு வாசல்படியைத் திறக்கும் முன் ஸ்ரீலட்சுமி மந்திரம் அல்லது ஸ்ரீவிநாயகர் மந்திரம் மனதில் நினைத்து திறக்க சுபிக்ஷம் உண்டாகும். தினமும் குளித்து துவைத்த ஆடைகளை அணிவபருக்கு வறுமை வராது. அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டும் கடலில் குளிக்கவேண்டும்.
சாப்பிடும் போது கிழக்கு, மேற்கு, தெற்கு நோக்கி சாப்பிடவும். வடக்கு நோக்கி சாப்பிடக்கூடாது. கை, கால் கழுவி விட்டு காலில் உள்ள ஈரத்தோடு சாப்பிட்டால் செல்வம் பெருகும். வாசலில் அமர்ந்து சாப்பிடக்கூடாது. உணவை உருட்டி சாப்பிடக்கூடாது. இலை (அ) தட்டை வழித்து சாப்பிடக்கூடாது. முதல் நாள் சமைத்த அசைவ உணவை மறுநாள் சாப்பிடக்கூடாது. பசித்தவுடன் உணவை உண்ணுங்கள், பசிக்காமல் உணவை உண்ண வேண்டாம். உணவை உண்ணும் போது எதையும் எண்ணாதீர்கள். ஞாயிறு, செவ்வாய், வியாழன் நாட்களில் உறவினர்கள், நண்பர்கள் விருந்து வைக்கக்கூடாது. புதிய ஆடைகளை முதன்முதலில் ஞாயிறு, வியாழன், வெள்ளி இந்த நாட்களில் அணிந்துக் கொண்டால் செல்வம் விருத்தி உண்டாகும். நகத்தைப் பல்லால் கடிக்கக்கூடாது. 
ஆண்கள் சனிக்கிழமையும், பெண்கள் வெள்ளிக்கிழமையும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். ஆண்கள் செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது. பெண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது. ஆண்கள் முடி வெட்டிக் கொண்டும், முகச்சவரம் செய்துக்கொண்டும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது. இவற்றை நம் வாழ்வில் கடைபிடித்தால் துயரம், கடன், வறுமை நீங்கும். லட்சுமி கடாட்ஷமும், செல்வச்செழிப்பும் பெருகும்.
7. தவயோகியே ஆயலத்தில் உக்ரம் வாய்ந்த தெய்வங்களான ஸ்ரீபிரத்தியங்கரா தேவி, ஸ்ரீவராஹிதேவி, ஸ்ரீஅஞ்சனாதேவி பால அனுமான், ஸ்ரீஐகிரிவர்த்தினி தேவி, ஸ்ரீகாளிதேவி  உருவங்களைப் பிரதிஷ்டை செய்துள்து உள்ளீர்களே, அவற்றின் சிறப்புகள் என்னவென்றும் எவ்வாறு நாங்கள் அந்த தெய்வங்களை பூஜித்து வழிபடுவதென்றும் கூறுங்களேன் ?
உக்ர தெய்வங்கள் அனைத்தும் அசுர சக்திகளை அழித்து தர்மத்தைக் காப்பாற்ற அவதரித்த சிறப்பு வாய்ந்த தெய்வங்கள். கலியுகத்தில் ஏற்படும் துன்பங்களிலிருந்தும் எதிரிகளின் தொல்லைகளில் இருந்தும் விடுபட ஏவல், பில்லி, சூன்யம், பிசாசு என்ற தீயசக்தியை முழுமையாக விரட்டிட ஸ்ரீபிரத்தியங்கரா காளிதேவியை ஞாயிற்றுக்கிழமை அன்று எலுமிச்சைபழ மாலையும், புஷ்ப மாலையும் சாற்றி ஐந்து தீபத்திரிகள் ஏற்றி உங்கள் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்தால் வெற்றி கிடைக்கும். துன்பம் விலகும். ஸ்ரீவராஹிக்கு வெள்ளிக்கிழமையன்று மலர் மாலை அணிவித்து கிழங்கு வகைப்படைத்து, தேங்காய் உடைத்து, அதில் நெய்தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தால் மாய மந்திரம், சூன்யம் விலகும். ஸ்ரீஅஞ்சனாதேவிக்கும், ஸ்ரீஜகிரிவர்த்தினிக்கும் சனிக்கிழமை அன்று மலர்மாலை அணிவித்து பழம் வெற்றிலை பாக்கு படைத்து ஐந்து நெய்தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்து வந்தால் மரணபயம் நீங்கும், விபத்து, மனக்குழப்பம் தீர்ந்து வாழ்வில் வெற்றி பெறலாம். தொழில் மேன்மை அடையும். இந்த 5 உக்ர தெய்வங்களுக்கு அமாவாசையன்று அவர்களுக்குரிய படையல், தீபம், விசேஷ பூஜை செய்யப்படுகிறது. இதில் கலந்துக்கொள்ளும் பக்தர்களுக்கு எண்ணிலடங்கா நற்பலன்கள் கிடைக்கும்.

8. ஆடிப்பூரம் என்றால் என்ன ? அதில் பங்கேற்பதால் என்ன நன்மை கிடைக்கும் என்பதையும் சொல்லுங்கள் சுவாமி !
அன்னை சிவகாளினி பக்தர்களைக் காக்க அவதாரம் எடுத்த திருநாள் தான் ஆடிப்பூரம். அன்று தான் உங்கள் குருவின் அவதாரத்திருநாளும் ஆகும். இந்த மகத்துவமான புண்ணிய நன்னாளில் அனைத்து சுபகிரகங்கள் ஒன்றிணைந்து நன்மை செய்யக்கூடிய நட்சத்திரமாக விளங்குவது திருஆடிப்பூரத் திருநாளாகும். ஆடிப்பூரத் திருநாளுக்கு முன்பிருந்தே அனைவரும் விரதமிருந்து ஸ்ரீசிவகாளி சக்தி மாலையை அணிந்து அனைவரும் செவ்வாடை அணிந்து பக்தி பூர்வமாக ஆடிப்பூரம் திருநாளில் கலந்துக்கொள்ளலாம். வாழ்வில் ஐஸ்வரியம், வெற்றி, மனநிம்மதியும் பெற பால்குடமும், செய்வினை பிணி நீங்க தீச்சட்டியும் எடுக்கலாம். பக்தி உணர்வோடு அன்னைக்குப் பால் அபிஷேகம் செய்வதால் நாம் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். அன்னையின் அவதாரத்திருநாளும், குருவின் பிறந்தநாளும் ஒரே நாளில் வருவது தெய்வாம்சம் ஆகும். அன்றைய தினம் பிரார்த்தனை செய்தால் எண்ணிய காரியங்கள் நடக்கும், வேண்டிய வரங்கள் கிடைக்கும். 
9. தவயோகியே அமாவாசையின் சிறப்புப் பற்றி தெளிவுப்படுத்துங்கள் ?
அமாவாசை என்பது இயற்கை சக்தியான சூரியன், சந்திரன் நேர்க்கோட்டில் இணைந்து தெய்வீக அதிர்வை உண்டு செய்கின்றன். சிவபெருமானும் காளிதேவியும் இணைந்து அருள்பாலிக்கும் நன்னாளே அமாவாசை. இந்த இனிய நன்னாளில் நடக்கும் சிறப்பு பூஜையில் கலந்துக்கொள்வதால் மனசஞ்சலத்தில் இருந்தும், தீய சக்திகளிடம் இருந்தும் விடுபட்டு தெய்வீக உணர்வைப் பெறலாம். அமாவாசை அன்று நடக்கும் கூட்டு வேள்விப்பூஜை அம்மாவின் நித்தியமங்கள அபிஷேகம், அருள் நிறைந்த நீதிக்கதைகள் கேட்பதாலும் கூட்டு பிரார்த்தனை, அம்மாவின் அற்புத திருநடனம், அருளாசி பெறுவதால் கனத்த இதயம் லேசாகி மனம் நிம்மதி அடைகிறது. ஆன்மா மனிதன் மானிதனாக மாறுவதற்கு வழிகாட்டும் நன்னாளே அமாவாசை திருநாள்.
அம்மா அவர்கள் பக்தர்களுக்கு அபிஷேக தீர்த்தம், பிரசாதம், எலுமிச்சம் கனி மற்றும் அருளாசியும் அம்மா அவர்களின் திருக்கரங்களால் வழங்கப்படுகிறது. இத்திருத்தலத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கருஞ்சிவப்பு ஆடை அணிந்த சக்தி காளிகள் ஆன்மீக சேவையைப் பக்தி உணர்வோடு செய்து வருகின்றனர். 
10. தவயோகியே யந்திரம், தகடு என்கிறார்களே அதை எப்படி பூஜை செய்யவேண்டும் ? அதனால் விளையும் பயன் யாது என்பதையும் தெளிவாகக் கூறுங்கள் சுவாமி ?
யந்திரம் பலவகை உண்டு. நம் ஆலயத்தில் ஸ்ரீசக்கர சிவகாளினி யந்திரம், ஐஸ்வர்ய சொர்ணகாளி யந்திரம், சர்வதோஷ நிவர்த்தி மகாகாளினி யந்திரம்,               சர்வ மங்கள காளீஸ்வரி யந்திரம் மிகவும் சிறப்பான முறையில் ஒரு மண்டலம்  (48 நாட்கள்) பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இது ஆதிகாலத்தில் ஆதிசங்கரர் பல திருக்கோயில்களுக்கு விஜயம் செய்து அங்கு ஸ்ரீசக்கரம் மகாமேரு யன, தன அகர்ஷன யந்திரங்கள், அம்பாள் யந்திரம் ஒவ்வொரு தேவைக்கு ஏற்ற அகர்ஷன யந்திரங்களை உருவாக்கி ஆலய விக்ரஹம் சிலைகளுக்கடியில் பிரதிஷ்டை செய்து அந்த சக்தி கிடைக்கும்படியாக செய்தார். மக்களுக்கு வரும் துன்பங்களில் இருந்து விடுபட்டு தங்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழும் துர்சக்திகளிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்காகவும் அஷ்டபந்தன பரிகார யந்திரங்களை உருவாக்கினர். 
சில சித்தர்களும் மக்கள் நன்மை பெற வேண்டி யந்திர வடிவங்களை உருவாக்கி வழங்கிவந்தனர். அவற்றின் அற்புத சக்தியால் மக்கள் தங்கள் துன்பம், தோஷங்கள் நீங்கி இறைவனின் அனுகிரகத்தைப் பெற்று சுபிட்சமாக வாழ்ந்தனர். அந்த பாரம்பரியத்தில் ஆதிசங்கரர் வழங்கிய இந்த யந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. 
யந்திரங்களில் 48 நாள் (ஒரு மண்டலம்) மந்திரம் உச்சாட்டனம் செய்து யாகவேள்விகள் செய்து தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டு விசேஷ வாசனை திரவிங்கள் சேர்த்து யந்திரத்தில் பூசி மூலஸ்தானத்தில் ஒரு மண்டலம் பூஜித்த இந்த யந்திரங்கள் உங்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிக்கவல்லது.
உங்களுக்கு எந்த பிரச்சனையோ அதற்கான யந்திரங்களை வாங்கி உங்கள் பூஜையறையில் சிவகாளினி அன்னையின் திருவுருவப்படத்திற்கு அருகில் வைத்து காமாட்சி விளக்கு ஏற்றி ஒரு எலுமிச்சம்பழம் நான்காக கீறி தாமரை இதழ் போல் விரித்து குங்குமம் தடவி யந்திரம் முன் வைத்து மூலிகை சாம்பிராணி புகையிட்டு சிவகாளினி மூலமந்திரத்தை ஜெபம் செய்து உங்கள் பிரச்சனைக்கு விசேஷமாக வழங்கிய குரு மூலமந்திரம் உச்சாட்டனம் செய்து மனம் உருகி பத்து நிமிடம் கண் மூடி உங்கள் புருவங்களுக்கு மத்தியில் (ஆக்னய சக்கரம்) மனதை நிலைநிறுத்தி உங்கள் வேண்டுதல்களை பிரார்த்தனை செய்யும்போது அதற்குண்டான பலனை நிச்சயம் பெறுவீர்கள். தினமும் காலையில் பூஜையை தொடர்ந்து செய்து வரவேண்டும். இரவு 9-00 மணிக்கு உறங்க செல்வதற்கு முன்பு அரிந்து வைத்த தாமரை இதழ் கொண்ட கனி கற்பூரம் ஏற்றி “மசி நசி ஓம்” நசி மசி சர்வதோஷமும் நசிந்து போக “எரிந்து போக” சிவ என்று ஒன்பது முறை கூறி உங்கள் வீட்டு தலைவாசற்படி முன்பாக எலுமிச்சைகனி சாறு பிழிந்து விடவேண்டும். இவ்வாறு ஒரு மண்டலம் 48 நாட்கள் செய்து வருவதால் அதர்மசக்தி அழிந்து தர்மசக்தி ஆற்றல் பெருகும். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் சுபிட்சமாக வாழ்வீர்கள்.
11. சுவாமிஜி ஓம் காளி சரணம் தோஷம் என்றால் என்ன ? அதன் வகைகள் மற்றும் தோஷத்திலிருந்து விடுபடுவது எப்படி என்று கூறுங்களேன் சுவாமிஜி ?
தோஷம் என்பது எதிர்மறை செயல். தீயசக்தி என்றும் கூறலாம். மனிதன் தன் வாழ்வில் அவ்வப்போது பிரச்சனைகளால் பாதிப்பு, மனக்குழப்பம், நிம்மதியின்மை, தூக்கமின்மை, விரக்தி, குடும்பத்தில் சண்டை சச்சரவு, கணவன் மனைவியிடையே சண்டை ஏற்பட்டு பல இன்னல்களை சந்திக்கின்றனர், எடுத்த காரியம் தடைபடுதல், நோய் தாக்கம், தொழில் வளர்ச்சியில் சரிவு, வேலையின்மை, மாங்கல்யம் தடை, புத்திர பாக்கியம் இன்மை போன்றவை தோஷத்தால் ஏற்படும் தீவினைகள் ஆகும். ஆண்டி முதல் அரசன் வரை தன் வாழ்நாளில் ஏதாவது ஒரு தோஷம் பாதிப்பால் தாக்கப்பட்டு துன்பத்தையும் துயரத்தையும் அடைகின்றனர். தோஷத்தைப்பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். எந்த தோஷமானாலும் அதற்கு தீர்வு உண்டு. தோஷத்தில் இருந்து விடுபட்டு வளமான வாழ்வைப் பெறமுடியும். இதுவரை பல மன்னர்கள் தன் நாட்டு மக்கள் நலமோடு வாழவேண்டும் என்று கருதி பலவிதமான தோஷம் பரிகாரம் செய்து நாட்டை காப்பாற்றினர். 
தோஷங்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி என்பதை அறிவோம்:
மனித உடல் நம் கண்களால் காணக்கூடிய தூல உடல் ஆகும். இந்த தூல உடலைச்சுற்றி நம் கண்களால் காண முடியாத அதிசூக்குமமான ஒரு புறஉடல், வெளிபக்க உடல் உள்ளது. இது ஒளி உடல் எனப்படும். மனித உடலைச் சுற்றி நம் கண்களுக்கே தெரியாத ஆரா என்ற ஓர் ஒளிவட்டம் உள்ளது. இதைத்தான் ஒளி உடல் என அழைப்பார்கள். நம் உடலில் உள்ள பிராண சக்தியின் அளவுக்கு ஏற்பவும், நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்பவும் இந்த ஒளிவட்டம் விரிந்து நம் உடலைச்சுற்றி இந்த ஒளி வட்டம் உருவாகிறது. நம் உடல் ஆரோக்கியம் இல்லாமல் இருக்கும்போது நம் உடலில் பிராணசக்தி குறைவாக இருக்கும் அப்போது நம் உடலின் வெளியே உள்ள ஒளிவட்டம் சுருங்கி காணப்படும். இந்த உடலை பிராண உடல் என்பார்கள். இந்த ஒளி உடலான பிராண உடலை நம் கண்களால் காண முடியாது. ஆனால் ஒளிப்பட கருவிகள் மூலம் பார்க்கமுடியும். இந்த ஒளி உடல் மேல்தான் நம் கண்களுக்கு தெரியாத வகையில் பல்வேறு தோஷங்களின் எதிர்மறை சக்திகளின் அலைகள் சூழ்ந்த ஓர் தடுப்பு வட்டத்தை உருவாக்கிவிடும். இதுதான் தோஷம் பாதிப்பு ஆகும். பல்வேறு தோஷங்களால் ஏற்படுகின்ற எதிர்மறை சக்தி அலைகள் நம் ஒளி உடலைச் சுற்றி ஓர் தடுப்பு வட்டத்தை ஏற்படுத்துகின்றன. இதுவே தோஷ பாதிப்பு.
மக்களை தாக்கும் தோஷங்கள் :
1. இராகு தோஷம் 15. பூர்வ ஜென்மதோஷம்
2. கிரக தோஷம் 16. கண் திருஷ்டி
3. கேது தோஷம் 17. பொறாமை
4. செவ்வாய் தோஷம் 18. மனை தோஷம்
5. சனி தோஷம் 19. விருட்ச தோஷம்
6. பித்ரு தோஷம் 20. சர்ப தோஷம்
7. களத்திர தோஷம் 21. பட்சி தோஷம்
8. தீயசக்திகள் தாக்குதல் 22. மிருக தோஷம்
9. கால தோஷம் 23. ரிஷி தோஷம்
10. மாங்கல்ய தோஷம் 24. தேவ தோஷம்
11. புத்திர தோஷம் 25. தீய எண்ணத்தாக்குதல்
12. ஜல சாப தோஷம் 26. அக்னி சாப தோஷம்
13. பிரேத சாப தோஷம் 27. ருது நீச்ச சாப தோஷம்
14. பிரம்மஹத்தி தோஷம்
நம் உடல் நிழல் எப்படி நம்மோடு கூடவே வருமோ அதுபோன்றே தோஷ அலை தடுப்பு வட்டம் நம்மை விட்டு விலகாமல் நம்மோடு இருக்கும். தெய்வீக அலைகள் நம்மை தொடர்பு கொள்ள முடியாமல் தடுத்து விடுகிறது. தோஷ அலைகள் நம்மை விட்டு விலகும்போது நமக்கு தெய்வீக சக்தி, நேர்மறை சக்தியின் தெய்வீக அருளும் ஆசியும் கிடைக்கிறது. தடைப்பட்ட காரியங்களில் எல்லாம் இனி தடைகள் விலகுவதால் நம் வாழ்வில் எல்லா வளங்களையும், வளர்ச்சியையும் பெறலாம்.
பல தவயோகிகள், சித்தர்கள் தோஷம் பற்றி அருந்தவத்தின் மூலமாக உணர்ந்தனர். தோஷங்களுக்கு நிவர்த்திக்கான ஆலயங்கள் அமைத்து தோஷ நிவர்த்திக்கான பல்வேறு வழிமுறைகளை கண்டறிந்து சித்தர்கள் மக்கள் பலன் பெற செய்தனர். நம் உடலை சுற்றி உள்ள தோஷ அலைகள் நம்மை விட்டு விலகவும், குறிப்பிட்ட கிரகங்களால் ஏற்படும் (ராகு, செவ்வாய், சனி) தோஷங்களை நிவர்த்தி செய்ய அவற்றிற்கு என ஆகம விதிப்படியும், சிற்ப சாஸ்திர முறைப்படியும் ஆலயங்களில் கருவறையில் ஆகர்ஷன காந்தக்கல்லை கொண்டு சிலை வடிவமைத்தனர். அந்த சிலையின் கீழ் பல கோடி மந்திரங்கள் உருவேற்றப்பட்ட யந்திரங்களை வைத்து இதன் மூலம் உருவாகும் (புரோட்டான் பாசிடிவ் வயா) சக்திகளை உள்ளேயே தேக்கி வைத்திருக்கும் வகையில் கருவறை முழுவதும் சக்தியுள்ள கருங்கற்களால் மட்டுமே கட்டி, தோஷங்கள் நீக்கும் வகையில் தெய்வீக சக்திகளை அதிக அளவில் உருவாக்கினார்கள். 
ஆலயம் உள்ளே ஆலய கருவறையை சுற்றி வரும்போது அதிர்வு அலைகள் நம்மால் உணர முடிகிறது. தோஷங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த ஆலயங்களுக்கு சென்று ஆலய கருவறையை சுற்றி வரும்போது கருவறையில் இருந்து வெளிவரும் தெய்வீக சக்தி அலைகள் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உடலை சுற்றியுள்ள தோஷ அலைகளை விலகச் செய்து விரட்டியடிக்கிறது. ஆலயங்களுக்கு சென்றவர்கள் பாதிப்புகளில் இருந்து விடுபட்டு அனைவரும் பலன் அடைந்தனர். 
சித்தர்களின் தோஷ நிவர்த்தி :
தோஷங்கள் பலவகைப்படும். தோஷங்களுக்கு ஏற்ப தோஷ நிவர்த்தி செய்ய வேண்டும். 
மந்திரம் : சில தோஷ பாதிப்புகளிலிருந்து விடுபட பல்வேறு மந்திரங்கள் உருவாகின. இந்த மந்திரங்களை உச்சரித்தாலும் சரி, உச்சரிப்பவர்களின் அருகில் இருந்தாலும் சரி, மந்திரங்களில் இருந்து வெளிப்படும் சக்திமிக்க அதிர்வுகள் நம் உடலை சுற்றியுள்ள தோஷ அலைகளை விலகிவிட செய்து தோஷநிவர்த்தி பெற வழி செய்தனர்.
யந்திரங்கள் : தோஷ பாதிப்புகளிலிருந்து விடுபட செய்ய வேண்டிய பிரத்தியேகமான யந்திரங்களை வடிவமைத்து அதில் மந்திரங்களை உருவேற்றி அந்த யந்திரங்களை வைத்து நாம் பூஜிக்கும்போது யந்திரங்களில் இருந்து வெளிப்படும் அதிர்வு அலைகள் நம் உடலை சுற்றி உள்ள தோஷ அலைகளை விலக செய்து தோஷ நிவர்த்தி பெற செய்தனர்.
மூலிகைகள் : தோஷ பாதிப்பிலிருந்து விடுபட பல்வேறு மூலிகை கொண்டு குளிப்பதன் மூலம் நம் உடலை சுற்றியுள்ள தோஷ அலைகளை விலகிவிட செய்வதால் தோஷ நிவாரணம் பெறலாம்.
புனித நதிகளின் தீர்த்தம் : சில தோஷ பாதிப்பில் விடுபட புண்ணிய நதிகளில் நீராடுதல், புனித தீர்த்தங்களைக் கொண்டு குளிப்பதாலும், நம் உடலை சுற்றியுள்ள தோஷ அலைகளை விலகி விடச்செய்து தோஷ நிவர்த்தி அடையலாம். தோஷங்களிலிருந்து விடுபட பல்வேறு வழிமுறைகளை, வழிகளை சித்தர்கள் நமக்கு அருட்கொடையாக அளித்து உள்ளனர். நாமும் இவற்றை இனிதே கடைபிடித்து நலமோடு வாழலாம். தோஷங்களை, திருஷ்டிகளை நீக்குவதற்கு எலுமிச்சை கனி, பூசணிக்காய், தேங்காய் ஆகியவற்றிற்கு அதிக சக்தியும், ஆற்றலும் உண்டு. தோஷம் பாதிக்கபட்டவர்களுக்கு சித்தஞ்சி சிவகாளினி சித்தர் பீடத்தில் தோஷம் நிவர்த்தி செய்யப்படுகிறது. தவத்திரு. சக்தி மோகனானந்த சுவாமிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கான தோஷ பரிகாரங்களை செய்து வருகிறார். இந்த பரிகார நிவர்த்தி யாக வேள்வியில் கலந்துக்கொண்டு பலன் பெற்றவர்கள் எண்ணிலடங்கா பக்தர்கள் ஆவர்.
“சிவகாளினி இருக்க பயம் ஏன்”

Powered by Blogger.